இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 1 கிலோ இஞ்சி ரூ.1,000க்கு விற்கப்படுவதாக பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான் டுவிட் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதால் வெகு ஜன மக்களின் சாதாரண வாழ்க்கை கடினமாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரெஹாம் கான், அத்யாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார்.

இந்த விலை உயர்வு நாட்டு மக்களை எப்படி பாதிக்கிறது என்பது பற்றிய அந்நாட்டு செய்தி சேனல் ஒன்று ஒளிபரப்பிய வீடியோவை தனது டுவிட்டர்  பக்கத்தில் மேற்கோள்காட்டி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

ராவல்பிண்டியில் ஒரு கிலோ இஞ்சி ரூ.1, 000க்கு விற்கப்படுகிறது. மிளகாய் ஒரு கிலோ ரூ.200ஐ எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். ஒரு மாதம் முன்பு கராச்சி, இஸ்லாமாபாத்தில் ஆகிய நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு விற்கப்பட்டது.

ஒரு குவிண்டால் கோதுமை விலை ரூ.6,000க்கு விற்கப்பட்டது. அதாவது கிலோ ரூ.60க்கு விற்பனையானது. முதல்முறையாக, கோதுமையின் விலை உச்ச நிலையை எட்டியுள்ளது.