வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸின் வளையத்திலுள்ள 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், அவருடைய அலுவலக முதன்மை அதிகாரி மார்க் ஷார்ட் மற்றும் அரசுக்கு வெளியிலான ஆலோசகர் மார்ட்டி ஆப்ஸ்ட் ஆகியோரும் அடக்கம்.
மேலும், இனிவரும் நாட்களில் துணை அதிபருடைய வட்டத்தைச் சேர்ந்த பலருக்கு பாசிடிவ் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மார்ட்டி ஆப்ஸ்ட் என்பவர் துணை அதிபரின் மூத்த அரசியல் ஆலோசகர்.
ஆனால், அவர் அரசு ஊழியர் அல்ல. தற்போது அவர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசியல் வட்டாரத்தில். மேலும், துணை அதிபர் பென்ஸின் அலுவலக ஊழியர்களில் குறைந்தபட்சம் 3 பேர் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம், துணை அதிபர் அலுவலகத்தில் எத்தனை பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற எண்ணிக்கையை வழங்க அந்த அலுவலகம் மறுத்துவிட்டது.