சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாக மக்கள் விருப்பம்

சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாக மக்கள் விருப்பம்

RUSSIA 1
சோவியத் ரஷ்யா மீண்டும் உதயமாக மக்கள் ஆதரவு

பெரும்பாலான ரஷிய குடிமக்கள், சோவியத் ஒன்றியத்தின் சரிவு ஒரு கெட்ட விஷயம் என்றும் அதனைத் தவிர்த்திருக்க முடியும் என்றும் நம்புகின்றனர்,  இன்னும் பல மக்கள் சோசியலிச அமைப்பையும் சோவியத் அரசையும் மீட்டெடுப்பதை வரவேற்கத் தயாராக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

தனியார் ஆய்வு நிறுவனமான லெவாடா மையம் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி பற்றி எதிர்மறை உணர்வுகளை 56 சதவீதம் பேர் ஒப்புக் கொண்டுள்ளனர், 28 சதவீதம் பேர் தங்கள் உணர்வுகள் முற்றிலும் நேர்மறையாக உள்ளதெனவும், 16 சதவிகிதம் பேர் தெளிவான பதில் கொடுக்க இந்த கேள்வி மிகவும் சிக்கலாக இருப்பதாகவும் கூறினர்.

பதிலளித்தவர்களில் 51 சதவீத மக்கள் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத்  தவிர்த்திருக்க முடியும் எனவும்  33 சதவீதம் பேர் அதை தவிர்க்க முடியாதது எனவும் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினர். 17 சதவீதம் மக்கள் சிலர் பதில் சொல்ல முடியவில்லை என்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் பொது மக்களிடம் சோவியத் ஒன்றியத்தை மீட்டெடுப்பதை விரும்புவார்களா என்று கேட்டபோது, 58 சதவீதம் பேர் ஆமாம் என்றார்கள், 14 சதவீதம் மக்கள் அத்தகைய திட்டம் இந்நேரத்தில் மிகவும் யதார்த்தமானதாக கருதப்படுகிறது என்று கூறினர். 44 சதவீதம் மக்கள் சோவியத் ஒன்றியத்தின் மீட்டெடுப்பு விரும்பத்தக்கதாக இருந்தாலும் இயலாதது என்றனர். 31 சதவீத மக்கள் அந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தால் சந்தோஷமாக இருக்காது என்று கூறினர். 10 சதவீதம் மக்கள் கேள்விக்கு ஒரு எளிய பதிலை கொடுக்க முடியவில்லை.

ஏப்ரல் 2005 இல், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷிய பாராளுமன்றத்தில் ஒரு பொது அறிவிப்பில், சோவியத் ரஷியாவின் சரிவைப் பற்றி கூறுகையில்,    “[கடந்த] நூற்றாண்டின் மிகப்பெரிய பூகோள அரசியல் பேரழிவு” என்றார். இந்த மேற்கோள் சர்வதேச செய்தி ஊடகங்களால் விநியோகிக்கப்பட்டு, சோசலிசத்திற்கு திரும்ப எண்ணும் கிரெம்ளினின் திட்டங்களை அது வெளிப்படுத்துகிறது என்று கூறினர். எனினும், ரஷிய தலைவர் மீண்டும் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் மக்களின் தினசரி வாழ்வில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி  கூறியதாக விளக்கம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டில், புட்டின் ஒரு ஆவணப்படத்திற்காக பேட்டி எடுக்கப்பட்ட போது சோவியத் ஒன்றியத்தை மீண்டும் கொண்டு வரும் திட்டம் ரஷ்யாவிற்கு இல்லை என்று நேரடியாக கூறி, ஆனால் இதை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை என்றும் புகார் கூறினார்.

அனைவரும் விரும்பும் சோவியத்யூனியன் வரலாறு கீழே சுருக்கமாக தொகுத்து கொடுக்கப் பட்டுள்ளது… சற்றுப் பொறுமையுடன் படியுங்கள்..

சோவியத் புரட்சி என்றால் என்ன ?

உலகியல் வரலாற்றிலே ஜரோப்பிய நாகரிகமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில், பல்வேறு சந்தர்ப்பங்களில் புரட்சிகள் இடம் பெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையானது வரலாற்றில் மறுக்க முடியாத உண்மையாகும். அவற்றுள் வரலாற்றில் தடம்  பதித்த முக்கியமான புரட்சிகளுள் ஒன்றாக ரஷ்யாவில் ஏற்பட்ட ‘சோசலிசப் புரட்சி’ விளங்குகிறது.

ஜரோப்பிய வரலாற்றில் மிகவும் விசாலமான பரந்த நிலப்பரப்பினைக் கொண்ட தேசமாக விளங்குவது  ரஷ்யாவாகும்.  ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டு, நவம்பர் 07 ஆம் தேதி, ‘போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம்’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட புரட்சிதான் ‘சோசலிசப் புரட்சி’ என அழைக்கப் படுகிறது.

ரஷ்யாவில் பல ஆண்டுகளாக ஜார் மன்னர்கள் சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டு வந்தார்கள். வளங்களைச் சூறையாடி ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். மக்களையோ வறுமையில் தள்ளினார்கள். அவர்களின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தார்கள்.

STALIN JOSEPH 1 STALIN 2

அவர்கள் மக்களின் நாடித்துடிப்பை அறியாமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்தினார்கள். அதனால் மக்கள் மத்தியில் பஞ்சம், பசி, பட்டினி என்பன தலை விரித்தாடின. இந் நிலைமை மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை உண்டு பண்ணியது. அதனால் ஜார் மன்னர்களின் வரம்பு மீறிய அதிகாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடனும்,  பாட்டாளி வர்க்கத்தினர் தமது சுய உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 1917 ஆம் ஆண்டு, நவம்பர், 07 ஆம் தேதி லெனினுடைய தலைமையில் ரஷ்யாவில் வெடித்த புரட்சிதான் சோசலிசப் புரட்சியாகும். ரஷ்ய வரலாற்றில் முதன் முறையாக தொழிலாளி வர்க்கத்தினரின் அடக்கு முறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததும், உலகியல் வரலாற்றில் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தினைப் படம் பிடித்துக் காட்டியதும் சோசலிசப் புரட்சிதான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

சோசலிஸ்டு நாடு:

உலக வல்லரசுகளில் ஒன்று ரஷியா. சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் தந்தையான லெனின், ரஷியாவை உருவாக்கினார். கம்ïனிஸ்டு கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சோசலிஸ்டு நாடு (யு.எஸ்.எஸ்.ஆர்) என்று அழைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அண்டை நாடுகளைச்சேர்ந்த பல பகுதிகளையும், சில குட்டி நாடுகளையும் இணைத்துக் கொண்டது. இதனால் ரஷியா உலகின் மிகப் பெரிய நாடாக விளங்கியது. இதன் நிலப்பரப்பு ஐரோப்பா, ஆசியா ஆகிய இரு கண்டங்களிலும் பரவி இருந்தது.

இந்த சோவியத் யூனியனில் கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்றது. இந்த நாட்டுக்குள் என்ன நடைபெறுகிறது என்பது வெளி உலகுக்கு தெரியவராது. இதனால் “இரும்பு திரை” நாடு என்று வர்ணிக்கப்பட்டது.

ரஷியக் கூட்டமைப்பில், ரஷியா, பைலோருஷியா, அர்மீனியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்தான், துர்க் மேனிஸ்தான், தஜிக்ஸ்தான், கஜகஸ்தான், கீர்க்கிஸ்தான், ஜார்ஜியா, உக்ரைன், மால் டோவியா, எஸ்டோனியா, லட்வியா, லிதுவேனியா ஆகிய 15 மாநிலங்கள் இருந்தன.

இதில் இடம் பெற்ற லிது வேனியா, லட்வியா, எஸ் டோனியா ஆகிய மாநிலங்கள் (இதற்கு பால்டிக் நாடுகள் என்று பெயர்) ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரஷியாவுடன் இணைந்தன.
கார்பசேவின் அமைதியை நோக்கிய பயணமும் , சோவியத் ரஷியாவின் வீழ்ச்சியும்:

கார்பசேவ் ரஷியாவில் உள்ள பிரிவோல்னயா என்ற கிராமத்தில் 1931_ம் ஆண்டு மார்ச் 2_ந்தேதி பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார். மாணவ பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்ட அவர் 21_ம் வயதில் கம்ïனிஸ்டு கட்சியில் உறுப்பினரானார். பிறகு கட்சியின் முக்கிய பொறுப்புகளை ஏற்றார்.

ரஷிய அதிபராக 1984_ம் ஆண்டு கார்பசேவ் பதவி ஏற்றார். அவர் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்தார். சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கம்யூனிஸ்டு ஆட்சியின் அதிகாரப்பிடியை தளர்த்தியதோடு, உலக அமைதி முயற்சியிலும் இறங்கினார். அணு ஆயுதங்களை ஒழிக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தார். இதனால் சமாதானத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்தது. உலக நாடுகளில் அவர் புகழ் ஓங்கியது. 6 ஆண்டுகள் சுமுகமாக நகர்ந்தன.

ஆனால் எதிர்பாராத சூழ்நிலையால் ரஷியாவில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டது. உள்நாட்டில் அவருக்கு எதிர்ப்பு கிளம்ப தொடங்கியது. 1991ம் ஆண்டு மத்தியில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது.

கார்பசேவ் ஜனாதிபதி ஆகும் வரை இருந்த பல்வேறு அதிபர்களிடமும் அதிகாரம் குவிந்து இருந்ததாலும், உலகின் மிகப் பெரிய வல்லரசாக ரஷியா திகழ்ந்ததாலும், இணைந்து இருந்த குட்டி நாடுகள் பிரிந்து போக ஆசைப்படாமல் இருந்தன.

கார்பசேவ் அதிபரானது முதல் அவரது அமைதிக் கொள்கையும், உணவுத்தட்டுப்பாடும் பல மாநிலங்களுக்கு பிரிந்து போகும் எண்ணத்தையும், தைரியத்தையும் கொடுத்தன. பால்டிக் நாடுகள் எனப்படும் லிதுவேனியா, லட்வியா, எஸ்டோனியா ஆகிய மாநிலங்கள் முதல் சுதந்திர குரலை எழுப்பின. அதன் பிறகு ஜார்ஜியாவும் சுதந்திரம் கோரியது.

சுதந்திரம் கோரி போர்க்கொடி உயர்த்திய மாநிலங்கள் இந்த 4 மாநிலங்களும் சுதந்திரப் பிரகடனம் செய்தன. இவற்றுக்கு தூதரக அங்கீகாரம் வழங்க ஜப்பான், பிரான்சு, இங்கிலாந்து, போலந்து, நார்வே, ஐஸ்லாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் முன்வந்தன.

பால்டிக் நாடுகளுக்கு விரைவில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என்று ரஷியாவை அமெரிக்கா வலியுறுத்தியது. சில மாநிலங்கள் சுதந்திர பிரகடனம் செய்தது கார்ப சேவுக்கு தலைவலியைக் கொடுத்தது. எனவே, அதி காரங்களை பரவலாக்கி மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

கம்யூனிஸ்டு கொள்கையில் தீவிரம் கொண்ட முன்னணி தலைவர்கள் சிலருக்கு இது பிடிக்கவில்லை. கார்பசேவினால் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே அவருக்கு எதிராக ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். திடீரென்று கார்பசேவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி செய்தனர்.
கம்யூனிஸ்டு தீவிரவாதிகள்:

கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சியை ரஷிய மாநில ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் எதிர்த்து நின்றார். கம்யூனிஸ்டு ஆட்சி முறையால் ஏமாற்றம் அடைந்து இருந்த மக்கள் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக துப்பாக்கியைத் தூக்க ராணுவம் மறுத்து விட்டது. இதனால் கம்யூனிஸ்டு தீவிரவாதிகளின் முயற்சி தோற்றுப்போனது. கார்பசேவ் விடுவிக்கப்பட்டார்.

புரட்சியை நடத்திய 8 முன்னணி தலைவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். புரட்சி தோல்வி அடைந்ததால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். புதிய பிரதமர் மற்றும் மந்திரிகளை கார்பசேவ் நியமித்தார். அவருக்கு கம்யூனிஸ்டு உயர்மட்ட குழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கார்பசேவ்வின் தலைமை பலவீனம் அடைந்தது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆர் மீனியா, மால்டோவியா, பைலோருஷியா, உஸ்பெக்கிஸ் தான், உக்ரைன் ஆகிய 5 மாநிலங்களும் சுதந்திர பிரகடனம் வெளியிட்டன. சுதந்திர நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட மாநிலத் தலைவர்களின் மாநாடு, கஜகஸ்தான் மாநில தலைநகரான “அல்மா அடா”வில் நடந்தது.

மொத்தம் உள்ள 15 மாநிலங்களில் பால்டிக் பகுதியைச்சேர்ந்த லிதுவேனியா, எஸ்டோனியா, லட்வியா ஆகியவை இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ரஷியா, உக்ரைன், கஜகஸ் தான், அஜர்பைஜான், அர் மினியா உள்பட 11 மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த 11 மாநிலத் தலைவர்களும் கூடி, தங்கள் மாநிலங்கள் சுதந்திர நாடுகள் என்றும், சோவியத் யூனியன் மறைத்து விட்டது என்றும் பிரகடனப்படுத்தினர். “காமன்வெல்த்” என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொள்வது என்றும் தீர்மானித்தனர். இந்த 11 மாநில தலைவர்கள் சார்பில் எல்ட்சின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“புதிய கூட்டமைப்பில் கார்பசேவுக்கு இடம் கிடையாது. அவர் பதவி விலக வேண்டியதுதான். சாகும் வரை பதவியில் இருப்பது என்ற மரபு 1920ல் தொடங்கியது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம்.

சோவியத் யூனியனுக்கு சொந்தமான அணு ஆயுதங்களும், அணு உலைகளும் பல்வேறு நாடுகளில் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை 11 நாட்டுத் தலைவர்களும் கூட்டாக கட்டுப்படுத்துவார்கள். காமன்வெல்த் கூட்ட மைப்பின் உயர் தலைமை பீடமாக 11 நாட்டு ஜனாதிபதிகளின் குழு இருக்கும். சம வாய்ப்பு, சம அந்தஸ்து அளிக்கப்படும். ஐ.நா. பாதுகாப்பு சபையில் சோவியத் ïனியனுக்குப் பதிலாக ரஷியா இடம் பெறும்.”

இவ்வாறு எல்ட்சின் கூறினார்.

இதனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது. அதன் அதிபரான கார்பசேவும் தனது பதவியை டிசம்பர் 25_ந்தேதி இரவு ராஜினாமா செய்தார். டெலிவிஷன் மூலம் கார்பசேவ் தனது ராஜினாமாவை அறிவித்தார். “நான் ராஜினாமா செய்வது என்ற தீர்மானத்துக்கு வந்தது தவிர்க்க முடியாதது” என்று கூறினார். புதிய கூட்டமைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

சோவியத் யூனியனில் இருக்கும் 30 ஆயிரம் அணு ஆயுதங்களின் “கட்டுப்பாடு” அதுவரை கார்பசேவிடம் இருந்தது. அவர் பதவி விலகியதும் “சகட்டுப்பாட்டை ரஷிய ஜனாதிபதி எல்ட்சினிடம் ஒப்படைத்தார்.

ராஜினாமா செய்த கார்பசேவுக்கு மாதா மாதம் ரூ.1 லட்சம் பென்ஷனாக வழங்கப்படும் என்றும், அவர் வசிப்பதற்கு அரசாங்க வீடும், கோடை காலத்தில் ஓய்வு எடுப்பதற்கு குளிர்பிரதேசத்தில் ஒரு வீடும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது புடின் ரஷ்யாவின்  அதிபராக உள்ளார்.

விரிவாகப் படிக்க:

1. 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா, இலிப்சன். இ, 1962,  அரச கரும மொழித் திணைக்கள் வெளியீடு பிரிவுப் பிரசுரம், பக்கம்–(430-478)
2. ஒரு தமிழன் பார்வையில் இருபதாம் நூற்றாண்டு வரலாறு,       ஐ. சண்முகநாதன், 2003, பூம்புகார் பதிப்பகம் பிரகாசம் சாலை சென்னை—600108, பக்கம்–(24-26)