மக்கள் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள்: விஜய் சேதுபதி வருத்தம்

சினிமாக்காரர்கள் என்றால் பலரும் கேவலமாக பார்க்கிறார்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி  வருத்த்தத்துடன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள கீ படத்தின் இசை வெளியீட்டு விழாகோலாகலமாக நடந்தது. அதில் விஜய் சேதுபதி, ஜீவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் டெக்னீசியன்கள் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்வில் பேசிய விஜய் சேதுபதி, “சினிமாக்காரர்கள் என்றால் மக்கள் கேவலமாக பார்க்கிறார்கள். தரம் தாழ்ந்தவர்களைப் பார்ப்பது போல் பார்க்கிறார்கள். எங்களை ஏன் அப்படி பார்க்கிறார்கள் என்று புரியவில்லை. ஒரு படம் எடுத்துப் பாருங்கள் அப்போது தெரியும், வலியும் வேதனையும்!  ஒரு படத்தை எடுப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடுகிறது”  என்று  வருத்தத்துடன் பேசினார்.

நடிகர்களை நாடாள அழைக்கும் மாநிலத்தில் இப்படியோர் மனக்குமுறல் தேவையா விஜய் சேதுபதி?

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: People look bad to us: vijay sethupathi, மக்கள் எங்களை கேவலமாக பார்க்கிறார்கள்: விஜய் சேதுபதி வருத்தம்
-=-