அமைதியாக இருங்கள்! டெல்லி மக்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்

டெல்லி:

டெல்லி மக்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும் இன ரீதியிலான போராட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரகிறது.  வடகிழக்கு டெல்லியின் பல இடங்களில் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக உருவெடுத்த நிலையில்,  இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து,  டெல்லி எல்லைகள் சீல் வைக்கப்பட்டு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு  ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,  வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அமைதியைக் காக்கவும் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும், உ.பி. மாநிலத்தில் வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில், அமைதியை நிலைநாட்ட தங்களால் முடிந்த அனைத்தை யும் செய்ய உத்தரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கூறியிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.