ஷார்ஜா: மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களில் 60% பேர், விமான சேவைகள் துவங்கியவுடன் பயணம் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்க பிராந்தியம், சுருக்கமாக, “மெனா” என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தின் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பது குறித்து ஆன்லைன் டிராவல் மார்க்கெட்பிளேஸ் வேகோ ஒரு சர்வே நடத்தியது.
அதில், சர்வேயில் பங்கேற்றோரில் 40% பேர் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்ந்ததும் விமானப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அதேவேளையில், பெரும்பாலானோர், அடுத்த 3 மாதங்களில் பயணம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக தெரிவித்தனர்.
தற்போதைய நிலையில், இந்தப் பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சிலவகை விமான சேவைகள், கடுமையான விதிமுறைகளுடன் வழங்கப்பட்டு வருகின்றன.