சிருங்கேரி:

தொடர் மழையால் பாதிப்புக்குள்ளாகி உள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சிருங்கேரி பகுதி மக்கள் அந்த தொகுதி எம்எல்ஏ தலைமையில் மழை நிற்க வேண்டி  பிரார்த்தனை செய்தனர்.

ர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மைசூர், சிக்மளூர் போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, மழை நிற்க வேண்டிய ஸ்ரீருங்கேரி ஊர் மக்கள் கோவிலில் பிரார்த்தனை செய்துள்ளனர். தண்ணீர் தேவையை கருத்தில், மழை வேண்டி தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தவித்து வரும் நிலையில், சிருங்கேரி மக்கள் மழையை நிற்க வலியுறுத்தி பிரார்த்தனை செய்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கமளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி, கோப்பா, என்.ஆர்.புரா, முடிகேர் மற்றும் சிக்கமகளுர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடுமையான அவஸ்தைகளை சந்தித்து வரும் சிருங்கேரி மக்கள்  தொடர்மழையை நிறுத்துமாறு.  மழை கடவுளான வருண பகவானிடம் பிரார்த்தனை செய்தனர்.

அந்த தொகுதி எம்எல்ஏ .டி.ராஜே கவுடா தலைமையில் அந்த பகுதி மக்கள், கிகா பகுதியில் உள்ள ரிஷ்யஸ்ரிங்கா கோவிலில் பலத்த மழையைத் தடுக்க பிரார்த்தனை செய்தனர்.

இந்த பகுதகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக, பல பகுதிகளில்  நிலச்சரிவு மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்தே அந்த பகுதி மக்கள் பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள்,  கர்நாடகா வறட்சியை அனுபவிக்கும் போதும், இதுபோல மழை வேண்டி ரிஷ்யஸ்ரிங்காவிடம் பிரார்த்தனை செய்வதும் குறிப்பிடத்தக்கது.