சென்னை:

2021ம் ஆண்டு தேர்தலில் மக்கள் அதிசயத்தை உருவாக்குவார்கள் என்று ஆன்மிக அரசியல் தொடங்கப்போவதாக சில ஆண்டுகளாக கூறி வரும், நடிகர் ரஜினி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு  டிசம்பர் 31ந்தேதி ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில், தனது அரசியல்ஆன்மிக அரசியல் என்றும் கூறியிருந்தார். ரஜினியின் அரசியல் அறிவிப்பு  தமிழக அரசியல் கட்சிகளின் மத்தியில் பதற்றத்தை வரவழைத்து. ஆனால், அறிவித்ததோடு, சரி இரண்டு ஆண்டுகளாகியும், பணத்தில் நடித்துக்கொண்டு பணத்தை சம்பாதிப்பதில் குறியாக உள்ள ரஜினி, அரசியல் கட்சித் தொடங்காமல், அவ்வப்போது பாஜகவின் ஊதுகுழலாக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் பாஜக தனக்கு காவிச்சாயம் பூச முயற்சி செய்வதாக கூறியவர், அடுத்த ஒரு மணி நேரத்திலேயே, தனக்கு காவிச்சாயம் பூச சிலர் முயற்சி செய்கிறார்கள் என மாற்றி பேசினார். தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஜினிக்கு மத்தியஅரசு சாதனையாளர் விருது வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, கோவாவில் நடைபெற்று வரும் உலக திரைப்பட விழாவில்  நேற்று ரஜினிக்கு சாதனையாளர் விருதை வழங்கி மத்தியஅரசு கவுரவித்து உள்ளது.

விருதுடன் இன்று சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  2021 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற  தேர்தலில் , தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நடத்திக் காட்டுவார்கள் என  கூறினார்.

மேலும் தனக்கு கிடைத்துள்ள  ‘கோல்டன் ஐகான்’ என்ற சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம் என்று கூறியவர்,  அந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

அரசியலில், நானும், கமலும் இணைந்தால் யார் முதல்வர் என்பது குறித்து, தான்  கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சியினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றவர், நான் கட்சி ஆரம்பிக்கும்போது  முடிவு சொல்கிறேன் என்றும்,  அதுவரை  இதுகுறித்து பேச விரும்பவில்லை என்று தவிர்த்து விட்டார்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, ஒருவேளை ரஜினி, கமல் இணைந்து களத்தில் இறங்கினால், தங்களுக்குத்தான் முதல்வர் பதவி எற்று கமல் கட்சி மகளிர்அணித்தலைவி ஸ்ரீபிரியா, ஏற்கனவே துண்டு போட்டு வைத்து விட்டது குறிப்பிடத்தக்கது