சென்னை

டிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரிவித்தது குறித்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் கமலஹாசன் திரையுலகுக்குக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.   இன்று வரை தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார்.  தற்போது அவர் திரையுலகுக்கு வந்து 60 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.    அதைப் போல் நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தொடர்ந்து கதாநாயகனாக இருந்து வருகிறார்.    கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியைத் தொடங்கி உள்ளார்.  ரஜினிகாந்த் அரசியலில் நுழைவதாக தொட்ர்ந்து அறிவித்தபடியே உள்ளார்.

நடிகர் கமலஹாசன் 60 வருட திரையுலக வாழ்க்கையைப் பாராட்டி ஒரு நிகழ்வு நடந்தது.   அதில் கலைத்துறையைச் சேர்ந்த பல நடிகர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.   இந்த நிகழ்வில் பேசும் போது நடிகர் ரஜினிகாந்த் தாமும் கமலஹாசனும் தமிழக மக்கள் நலனுக்கு இணைந்து பணியாற்றத் தயார் எனத் தெரிவித்தார்.   அதைக் கமலஹாசனும் ஆமோதித்தார்.

இது குறித்து சமூக தளமான டிவிட்டரில் பல விவாதங்கள் எழுந்துள்ளன.  இது குறித்த பதிவுக்குப் பின்னூட்டமாக வந்தவற்றை நாம் இங்குக் காண்போம்

:திரைப்பட பிரபலங்கள் இல்லாமல் இனி அரசியல் இல்லை என ஆகி விட்டது”

“ஏதாவது புது திரைப்படத்தில் இணைகிறீர்களா?”

”நாளுக்குநாள் இருவரும் பாஜக அனுதாபிகள் என்பதை நிருபித்து வருகின்றனர்.  2021 ஆம் வருடத்துக்குப் பிறகு அவர்கள் மற்றொரு ஈ பி எஸ் மற்றும் ஓ பி எஸ் ஆக மாறிவிடுவார்கள்”

”இருவரும் இணையும் படத்தின் பெயர் என்ன? 61 வயதினிலே தானே?”

அதில் ஒருவர் மீம்ஸ் உருவாக்கி அதில்,

நான் அரசியலுக்கு வந்தால் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் – ரஜினி

தெரியும் தலைவா,,,, நீதான் பள்ளிக்கூடத்துக்கே வாடகை குடுக்க மாட்டியே”

எனப் பதிந்துள்ளது நகைச்சுவையை உண்டாக்கி இருக்கிறது.