சேலம்: ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து .. வீடுகளில் கறுப்புக் கொடி

 

சேலம்:

ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிப்பட்டி என்ற ஊரில் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் மக்கள்.

சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அருகே உள்ளது நரசோதிப்பட்டி. இந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் இன்று கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடை இன்னும் நீடித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி அமைதிப் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.