கதிராமங்கலம் : கைதானவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்

 

திராமங்கலம்

என் ஜி சி க்கு எதிராக போராடி கைதான பேராசிரியர் ஜெயராமன் உட்பட 9 பேரையும் விடுவிக்கக்கோரி கதிராமங்கலம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்

ஓ என் ஜி சி நிறுவனம்  கதிராமங்கலத்தில் பதித்திருந்த குழாய்களில் எண்ணெய் கசியத் தொடங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.  நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அங்கு வருவார் என எதிர்பார்த்த ஆட்சியாளர் வரவில்லை.   காவல்துறை கண்காளிப்பாளர் மட்டும் வந்திருந்தார்.

திடீரென அந்த எண்ணெய்க் குழாய் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.   இதனால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.   மக்களே தீவைத்ததாகக் கூறி மக்களை போலீஸ் தாக்கி விரட்டினார்கள்.   இதில் மக்கள் பலர் காயம் அடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் ஜெயராமன் உட்பட ஒன்பது பேரை காவல்துறை கைது செய்தது.   அவர்கள் மீது வெடிகுண்டு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊர் மக்கள்,  அந்த ஒன்பது பேரை விடுதலை செய்யக் கோரியும்,  போலீசாரின் அட்டூழியத்தை எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   வணிகர்கள் கடையடைப்பு செய்துள்ளனர்.            இது வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் கதிராமங்கலத்தில் பதட்டம் நிலவுகிறது