செங்கல்பட்டு : கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

செங்கல்பட்டு

நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பின் சென்னைக்கு பலரும் திரும்புவதால் செங்கல்பட்டு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

தீபாவளிப்ப் பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் தொடர்ந்து நான்கு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் சென்னையில் பணிபுரியும் வெளியூர் வாசிகள் பெருமளவில் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.

அரசு பேருந்துகளில் மட்டும் இம்முறை சுமார் 7.5 லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துக் கொண்டு உள்ளனர். இதனால் சென்னை நுழைவாயில் என கூறப்படும் செங்கல்பட்டில்

போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேர்ந்துள்ளது. வாகனங்கள் ஒரு அங்குலம் நகர பல நிமிடங்கள் ஆகிறது. இதனால் சென்னை திரும்பும் மக்கள் கடும் அவதியுற்றுள்ளனர்.