அரவக்குறிச்சி,
மிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிக்கான தேர்தல் சூடுபிடித்து உள்ளது. பல இடங்களில் வேட்பாளர்களை மடக்கி  மக்கள் கேள்வி கேட்க  தொடங்கி உள்ளனர். இதனால் இரு பெரும் கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் 19ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த மாதம்  19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 22-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மதியமே முடிவுகள் அறிவிக்கப்படும்
அவரக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட செந்தில் பாலாஜியே தற்போதும் போட்டியிடுகிறார். அதேபோல் திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட கே.சி.பழனிசாமியே தற்போதும் போட்டியிடுகிறார். இரு கட்சிகளுக்கும் இடையே அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
செந்தில் பாலாஜி – அதிமுக
செந்தில் பாலாஜி
நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புகழூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவரை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் வழிமறித்தனர்.
பிரசாரத்தின் போது மணல்குவாரிகளை மூடுவதாக பேசுகிறீர்கள். ஆனால் வெற்றி பெற்ற பிறகு இதுகுறித்து யாரும் கவலைப்படுவது இல்லை.
ஆகவே, மணல் குவாரிகளை மூடுவேன் என்று. அஇந்த உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போங்கள்… என கறாராக கூறிவிட்டனர்..
இதனால், செய்வதறியாது   திகைத்துப்போன செந்தில் பாலாஜி,  வேறுவழி இல்லாமல் அந்த படிவத்தில் கையெழுத்துப் போட்டார். அதை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் வீடியோ எடுத்தனர்.
அப்போது,  வீடியோ எடுக்கவிடாமல் அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மணல்குவாரிகளை மூடக் கோரி காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். நல்லகண்ணு, வைகோ உள்ளிட்ட பல தலைவர்களையும் அழைத்து வந்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டங்களை முன்னெடுத்ததால் புகழூர் விஸ்வநாதனை  மணல்குவாரி தாதாக்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
kcp
கே.சி.பழனிச்சாமி – திமுக
அதேபோல், திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி, புன்னம்சத்திரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, பொதுமக்கள் அவரை மடக்கினர்.
தேர்தல் வரும் போது மட்டும்தான் உங்களை பார்க்க முடிகிறது.  ஓட்டு கேட்க வரும்போது  மட்டும் உங்களை பார்க்கிறோம் மற்ற நேரங்களில் உங்களை பார்க்ககூட முடியவில்லை என்று அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
நீங்கள் எங்கள்  பகுதிக்கு என்ன செய்தீர்கள்  அவரை முற்றுகையிட்டு என்று கேட்னர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் செய்வதறியாது திகைத்த கே.சி.பழனிச்சாமி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து, அடுத்த பகுதிக்கு சென்று மீண்டும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அரவக்குறிச்சி தொகுதியில் ஆங்காங்கே  மக்களின் எழுச்சி காரணமாக இரு பெரிய திராவிட கட்சிகளும் கலக்கத்தில் உள்ளன.
அரவக்குறிச்சியில் 5 முனை போட்டி நிலவுகிறது. பாரதியஜனதா சார்பில் எஸ்.பிரபுவும், பா.ம.க சார்பில் பி.எம்.கே.பாஸ்கரனும், தேமுதிக சார்பில் அரவை எம்.முத்துவும் களத்தில் உள்ளனர்.