ஈரோடு:

அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட மோதல் காரணமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை 18 பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கும், முதல்வர் எடப்பாடிக்கும் சேலையை பார்சல் அனுப்பும் போராட்டம் நடத்திய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில்,  ஈரோடு கிழக்கு மாவட்ட கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நல சங்க செயலாளர் ஜெகதீசன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் சேர்ந்து, ஸ்பீடு போஸ்ட் மூலம் முதல்-அமைச்சருக்கு நைட்டியும், சபாநாயகருக்கு சேலையும் அனுப்பும் நூதன போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தை தொடர்ந்து  ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்துக்கு வந்த அவர்கள் ஸ்பீடு போஸ்டு மூலம் சேலை, நைட்டி பார்சலை  னுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு டவுன் போலீசார் போராட்டம் நடத்திய இளைஞர்கள் 8 பேரையும் கைது, எச்சரித்து விடுதலை செய்தனர்.