சென்னை:

ழைநீர் சேமிக்க பழுந்தடைந்த போர்வெல்களை பயன்படுத்துங்கள்! பொதுமக்களுக்கு மழைநீர் மைய இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மழை நீர் வடிகால்களில் நிலத்தடி நீர் செல்லவதற்கு எந்தவொரு வசதியும் செய்யாமல், தவறான முறையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது என்று தமிழக அரசையும் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழகத்தில் ‘கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததால் சென்னை உள்பட பல பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோரப்பகுதிகளான நீலகிரி, உடுமலைப்பேட்டை, கொடைக்காணல், நெல்லை மாவட்டங் களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும்சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

தற்போது வங்கக் கடலின் வடபகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும், சென்னை உள்பட சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், மழைநீர் சேகரிப்பு பணி சரியான முறையில் அமல்படுத்தாததால், கடந்த ஜூன் மாதம் 1ந்தேதி முதல் இதுவரை  சுமார் 9.5 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தால், சென்னையில் 60 சதவிகித தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் சமீபத்தில் பெய்த மழை நீர் 150 நாட்கள் குடிநீர் தேவையை சமாளிக்கும் என்றும், அந்த நீர் வீணாக கடலுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து  மழைநீர் மையம் இயக்குனர் ராகவன் கூறியி ருப்பதாவது,

இதற்கிடையில், இந்த மாதம் 24ந்தேதி வரை 221 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.  ஆனால், இந்த மழைநீரில் 80 சதவிகிதம்  முழுவதும் வீணாக போயுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் மழை மையம் இயக்குனர் சேகர் ராகவன்.

தமிழகத்தில் சரியான மழைநீர் சேகரிப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளவர், சுமார் 426 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள பெருநகரமான சென்னையில், மழைநீர் சேகரிப்புக்கான தொட்டிகள் ஆழமாக இருக்க வேண்டும் என்று  தெரிவித்து உள்ளார். ஆனால், அதற்கான கட்டமைப்புகள் இங்கு இல்லை என்றவர், மழைநீர் சேகரிப்பு அத்தியாவசியம்  என்பதை மக்கள் உணர வேண்டும். இது ஒரு தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

நமது மாநிலத்தில் வறட்சி  எதிர்காலத்தின்  இன்னும் கடுமையாக இருக்கும் என்று கூறியவர், மழைநீரை சேமிக்காமல் தவறவிட்டால்,  தண்ணீருக்கான எங்கள் போராட்டம் தீவிரமடையும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் மழைநீர் சேகரிப்பு சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால், எங்களால் ஒரு நபருக்கு  ஒரு நாளைக்கு 163 லிட்டர் அளவுக்கு முழு நகரத்திற்கும் வழங்க முடியும்.

சென்னையின் கணிசமான பகுதி களிமண் மண்ணைக் கொண்டிருப்பதால், களிமண் பகுதியை துளையிட்டு மழைநீரை நிலத்தடி நீர்நிலைக்கு கொண்டு சென்று மழைநீரை சேமித்தால் மட்டுமே, வருங்காலத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தவர்,  நிலத்தடி நீர் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், மழைநீரை சேமிக்க பொதுமக்கள் ஏற்கனவே பழுதாக போர்வெல் களைப் பயன்படுத்தலாம் என்றும் ஆலோசனை கூறி உள்ளார்.

ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் கால்வாய்

பொதுவாக ஒரு போர்வெல்லானது 3 ஆண்டுகள் மட்டமே செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல லட்சம்  போர்வெல்கள் தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன. இதை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த போர்வெல்கள் மழைநீர் சேகரிப்புக்கு அருமையான இடம் என்றும் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால்களை சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளவர்,  சென்னை கார்ப்பரேஷன், மண்ணில் கூட புயல் நீர் வடிகால் அமைத்து வருகிறது, அங்கு மழை நீர் எளிதில் பூமிக்குள் சென்று விடும், அதுபோல,  களிமண் மண் பகுதிகளில் கட்டப்பட்ட மழை நீர் வடிகால்களில் நிலத்தடி நீர் செல்லவதற்கு எந்தவொரு வசதியும் செய்யாமல், தவறான முறையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.