சென்னை:

ற்போது வாக்குப்பதிவு நடந்துகொண்டிருக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்குச்சாவடிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

 

இன்று காலை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு  துவங்கியது. ஆனால், காலை 7 மணிக்கே வாக்குச்சாவடிகள் முன் மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.

நேரம் செல்லச் செல்ல, கூட்டம் அதிகரித்தபடியே இருந்தது. இதனால் சில இடங்களில் மக்களிடையே லேசான தள்ளுமுல்லு ஏற்பட்டது. அங்கிருந்த காவலர்கள் மக்களை சமாதானப்படுத்தினர்.

மக்களின் இந்த ஆர்வத்துக்குக் காரணம், வேட்பாளர்கள் நன்கு “கவனித்ததுதான்” என்று ஒரு கருத்து நிலவுகிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு தலா 6,000 ரூபாயும், தி.மு.க. வேட்பாளர் மருது. கணேசின் ஆதரவாளர்கள் ஓட்டுக்கு தலா 3,000 ரூபாயும் அளித்ததாகக் கூறப்படுகிறது.

சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன், சார்பில் ஓட்டுக்கு தலா 12, 000 ரூபாய் அளிக்க வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தலுக்குப் பிறகு இத்தொகை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம், ஆர்.கே. நகர் வாக்காளர்கள், “பணத்துக்காக வாக்குப்பதிவில் நாங்கள் ஆர்வம் காட்டவில்லை. எம்.எல்.ஏ. இல்லாத நிலையில் எங்கள் பிரச்சினைகளை சொல்வதற்குக்கூட ஆள் இல்லை. ஆகவேதான் ஆர்வத்துடன் வாக்களிக்கிறோம்” என்றனர்.

வேறு சிலர், “தேர்தல் திடீரென நிறுத்தப்படும் என்று ஒரு தகவல் உலவுகறது.  அதற்குள் வாக்களித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் முன்னதாகவே வந்து காத்திருந்து வாக்களித்தோம்” என்கிறார்கள்.

எப்படியோ ஜனநாகக் கடமையை இத்தனை ஆர்வத்துடன் செய்து முடிக்கும் ஆர்.கே. நகர் வாக்காளர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.