Random image

நோட்டாவுக்கு ஜே போட்ட சென்னை மக்கள்

1456307398-9302

தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் எவரையும் பிடிக்கவில்லை என்றால், “யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை” என்பதை உணர்த்த நோட்டாவுக்கு வாக்களிக்கலாம்.

இந்த முறையை பலர் விமர்சித்துவருகிறார்கள். “யாருக்கும் உபயோகமற்ற ஓட்டு, செல்லாத ஓட்டு” என்று கூறிவருகிறார்கள்.

ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுதும்  நோட்டாவுக்கு 5.58 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

மொத்த வாக்காளர்களில் 100 பேரில் ஒருவர் நோட்டாவுக்கு வாக்கு அளித்துள்ளார். அதிலும் சென்னை பகுதியில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இங்கு 50 பேரில் ஒருவர் நோட்டாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

மிக அதிகபட்சமாக வேளச்சேரி மக்கள் 4225 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.  அமைச்சர் கோகுல இந்திரா போட்டியிட்ட அண்ணாநகரில் 4048 ஓட்டுக்களையும், விருகம்பாக்கத்தில் 3897 ஓட்டுக்களையும், துறைமுகம் தொகுதியில் 2101 ஓட்டுக்களையும் நோட்டா பெற்றுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் 2873 பேரும், திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 3554 பேரும் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.

சென்னையின் புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூரில் 7332 ஓட்டுக்களும், மதுரவாயலில் 6655 ஓட்டுக்களும், பல்லாவரத்தில் 5823 ஓட்டுக்களும், அம்பத்தூரில் 5603 ஓட்டுக்களும், தாம்பரத்தில் 5007 ஓட்டுக்களும் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது.

“மக்கள் ஏதோ மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதன் அறிகுறிதான், நோட்டாவுக்கு கிடைத்திருக்கும் ஆதரவு. அரசியல் கட்சிகள் இது குறித்து சிந்திக்க வேண்டிய தருணம் இது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.