ராகுல் பிரதமராக வரவேண்டும் என்பது மக்கள் விருப்பம்! திருநாவுக்கரசர்

சென்னை,

ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் எண்ணம் நாட்டு  மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வடக்குப்பட்டு வீரராகவசாரியாரின் 101-வது நினைவு தினம் இன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் காங்கிரசின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது,  ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: People want Rahul Gandhi to come as prime minister! Tirunavukkarasar, ராகுல் பிரதமராக வரவேண்டும் என்பது மக்கள் விருப்பம்! திருநாவுக்கரசர்
-=-