சென்னை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் இன்று மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டு இன்று காலை முதலே வீடுகளில் முடங்கினர்.

இதனால் அண்ணாசாலை, கடற்கரை சாலை உள்பட பல தெலுக்களின் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. பலரது வீடுகளின் முன்பு மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டு கொரோனா பலவலை தடுக்கும் முயற்சியில் இல்லத்தரசிகள் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊடரங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று நாடு முழுவதும் கடைகள், டாஸ்மாக் கடைகள் இயங்காது என்றும், மெட்ரோ ரயில், பயணிகள் ரயில், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், ஆட்டோ, கால் டாக்சி, லாரிகளும் ஓடாது என்றும் சில உள்ளூர் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்டவை இன்று திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மக்கள் ஊரடங்கை தமிழக மக்கள் காலை முதலே கடைபிடித்து வருகின்றனர். நாடு முழுவதும்  உள்ள முக்கிய சாலைகள்  வெறிச்சோடி உள்ளது.