இன்றும் சென்னையில் கன மழை : வாகன ஓட்டிகள் அவதி

சென்னை

ன்றும் சென்னையில் மழை பெய்ததால் சாலைகளில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.

நேற்று போல் இன்றும் சென்னையில் கன மழை பெய்தது.  இதற்குத் தென்மேற்கு திசையில் அதிக அளவு காற்று வீசுவதால் மேகங்கள் உருவானதும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணம் எனக் கூறப்படுகிறது.   .

சென்னையில் இன்று அண்ணாநகர், போரூர், வடபழனி, ராமா புரம்,கிண்டி, அடையாறு, மைலாப்பூர்  போன்ற இடங்களில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்துள்ளது. சென்னை மட்டுமின்றி புறநகர்ப் பகுதிகளிலும் மழைபெய்து வருகிறது.  தாம்பரம், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி,  பூந்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்துள்ளது.

இதனால் குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.   ஒரு சிலர் வாகனங்களைத் தள்ளிச் செல்ல முடியாமல் அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி