சென்னை:
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்படும்,  சோதனையில், நோயின் பாதிப்பு அளவு சராசரி அளவில் இருந்தால் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம், பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது, அதனுடனேயே வாழப் பழகிக்கொள்ளுங்கள் இந்தியா உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை , 106,750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும்  3 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில், இன்று தமிக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்  புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஒருவருக்கு கொரோனா தொற்று  சராசரி அளவில் இருந்தால், அவரை 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம், ஆனால் அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும்,  பிற மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.