பாப்கார்ன் வாங்க ரூ.150 செலவிடும் மக்கள் ஒரு லிட்டர் பால் வாங்க ரூ.45 செலவிட முடியாதா? நீதிபதி கோபம்

சென்னை:

பாப்கார்ன் வாங்க ரூ.150 செலவிடும் மக்கள் ஒரு லிட்டர் பால் வாங்க ரூ.45 செலவிட முடியாதா? என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, கருத்து தெரிவித்த நீதிபதி பால் கிருபாகரன், மக்கள் மனநிலை மாசு அடைந்து விட்டது என்று வருத்தம் தெரிவித்தார்.

சினிமா தியேட்டர், மால் போன்ற இடங்களில் சாதாரண பாப் கார்ன் ரூ.150 கொடுத்து வாங்குகிறார்கள், ஆனால், மக்களின் அத்தியாவசியத் தேவையான பால் லிட்டர்  ஒன்று ரூ.45 கொடுத்து வாங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்… அந்த அளவுக்கு மக்களின் மனசு மாசு படிந்துபோய்  உள்ளது என்று தெரிவித்தார்.

You may have missed