பாஜகவின் அகந்தைக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் : பிரியங்கா காந்தி

டில்லி

க்கள் பாஜகவின் அகந்தைக்கு தக்க பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் கட்சி செயலர் பிரியங்கா காந்தி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செயலரும் உத்திரப் பிரதேச கிழக்கு பகுதியின் பொருப்பாளருமான பிரியங்கா வதேரா காந்தி நாடெங்கும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.   அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.  பிரியங்கா காந்தியை தி டிரிப்யூன் செய்தி ஊடகத்தின் செய்தியாளர் பேட்டி கண்டுள்ளார்.

அந்த பேட்டியின் சுருக்கம் வருமாறு :

கே : நீங்கள் காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்க நாடு முழுவதும் பயணம் செய்துள்ளீர்கள்.   இந்த பொதுமக்களின் சந்திப்பு மற்றும் பயணத்தின் மூலம் உங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் தகவல்கள் என்ன?

ப : இந்த ஐந்து வருடங்களில் மக்கள் மிகவும் துயருற்றுள்ளனர் என்பதே எனக்கு கிடைத்த மிகப் பெரிய செய்தியாகும்.  அரசு மக்களின் பிரச்னைகளை களைவதை விட பிரச்னைகளை அதிகரிப்பதில் குறியாக உள்ளது.   நான் விவசாயிகளிடம் பேசிய போது தங்கள் விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என கூறி உள்ளனர்.

உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பல நிலங்களில் ஆதரவற்ற கால்நடைகள் பயிர்களை மேய்ந்து விடுகின்றன.    அதை தடுக்க அரசு உதவுவதில்லை.  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடையாது.   பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.  விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளன்ர்.    டில்லிக்கு குறை கூற வந்த விவசாயிகளை பார்க்கக் கூட பிரதமருக்கு நேரம் இல்லை.

கே : இந்த தேர்தலில் மக்களை பாதிக்கும் உண்மையான அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்னைகள் என்ன?

ப : பொது மக்களை துயரப்படுத்தும் பிர்ச்னைகள் எவ்வாறு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும்?  உண்மையான அரசியல் பொது மக்களுக்கும் அவர்களுடைய பிரச்னைக்கும் இடையே உள்ளதாகும்.  பொதுமக்களின் அன்றாட பிரச்னைகளை கவனத்தில் கொள்ளாமல் எந்த ஒரு அரசியல் நிகழ்வும் கிடையாது.

பொது மக்கள் இல்லாத ஒரு அரசியல் சூழலை பாஜக நினைக்கலாம்.  எங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது.   பொதுமக்களின் குறைகளை பற்றி பேசாத பிரதமர் அறுபது வருடம் முன்பு நடந்ததை குறித்து பேசி வருகிரார்.    என்னைப் பொறுத்தவரை பொதுமக்களின் தினசரி பிரச்னைகளை மீறி எந்த ஒரு அரசியல் நிகழ்வும் கிடையாது.

கே: பாஜக முன்பு இருந்த அளவுக்கு தற்போது வலுமையாக உள்ளதா என்பதுகுறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

ப: நான் பாஜக கூட்டணிக்கு முடிவு வந்துள்ளதாக எண்ணுகிறேன்.   இதை எனது சகோதரரும் தெரிவித்துள்ளார்.  இதற்கு காரணம் பாஜகவின் அகந்தை என்பது அனைவரும் அறிவார்கள்.   இந்த அகந்தையை மக்கள் விரும்பவில்லை.   இதை திருத்த வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர்.   இந்த தேர்தல் மூலம் அவர்கள் பாஜகவின் அகந்தைக்கு பதில் அளிப்பார்கள்