டில்லி

முகநூல், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் படங்கள் ஒப்பன் ஆகாமல் உள்ளது.

உலகின் பெரும்பான்மையான மக்கள் முகநூல், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனாளிகளாக உள்ளனர். படங்கள், தகவல்கள் செய்திகள் அனுப்ப இந்த சமூக தளங்களை சாமானியர் முதல் பிரபலங்கள் வரை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த சமூக தளங்களில் படங்கள் ஓப்பன் ஆகாத நிலை உள்ளது. இந்த நிலை முகநூல், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நிலவி வருகிறது. பயனாளிகள் இதற்கான காரணம் புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து டிவிட்டரில் பல பதிவுகள் இடப்பட்டு வருகின்றன..