புயல் காரணமாக தனுஷ்கோடி செல்ல பயணிகளுக்கு தடை

--

னுஷ்கோடி

ஜா புயல் எச்சரிககையை ஒட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு தனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை கடலூருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலின் வேகம் அடிக்கடி மாறுபடுவதால் சரியான நேரம் குறித்து வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிக்க முடியாமல் உள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதியில் கடல் அமைதியுடன் உள்ளதால் இங்கு புயலின் தாக்கம் அதிகரிக்கும் என மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அங்குள்ள படகுகள் வேறு இடங்க்ளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

தற்போது  சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் தனுஷ்கோடிக்கு செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கஜா புயல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி செல்ல தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ள்து.