பீஜிங்:

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா, தற்போது, அதிலிருந்து விடுதலைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

கடந்த ஆண்டு (2019) இறுதியில் சீனாவில் இருந்து பரவி கொரோனா வைரஸ் காரணமாக, அங்குள்ள வுகான், ஹுபே மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த மாநிலங்களைச் சேர்ந்த சுமார்  11 மில்லியன் மக்களும் ஜனவரி 2020ல்  கடுமையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர், சீனாவின் மற்ற பகுதிகளும் பொதுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளைச் செய்தன.

கொரோனா தாக்குதலுக்கு சீனாவில் மட்டும்  3,245  பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அங்கு கொரோனா தொற்று முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு தொடங்கப்பட்ட கொரோனா தொற்று தற்காலிக மருத்துவமனை மூடப்பட்டது. மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்த மக்கள் கடந்த10 நாட்களாக வீட்டை விட்ட வெளியேறி இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். நேற்று முதல் மாநில எல்லைகளும் திறக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக,  மக்களும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று வருகின்றனர்.

நாட்டின் பிற பகுதிகளிலும மக்களின்  வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்கு வரத் தொடங்கி உள்ளது.  மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்கிறார்கள், தொழிற்சாலைகள் இயங்குகின்றன, சில பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள் மீண்டும் தொடங்குகின்றன.

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதை நிரூபிக்கும் வகையில், அங்குள்ள சாலையோர கடைகள் மீண்டும் முளைத்துள்ளன.