பெப்ஸி கோக் புறக்கணிப்பு  ஜனநாயக விரோதமாம்! அடுத்து தேச விரோதம் என்பரோ?

டில்லி:

மிழகத்தில் பெப்ஸி – கோக் போன்ற வெளிநாட்டு பாணங்களை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம்” என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்திய குளிர் பாணங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வெளிநாட்டு குளிர்பாணங்களை புறக்கணிப்பு என்பது நாட்டின் அடிப்டை பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானதாகும். நுகர்கவோர்கள் தாங்கள் விரும்பும் பொருளை தேர்ந்தெடுக்கும் உரிமைக்கும் எதிரானதாகும்.

கோக் – பெப்சி நிறுவனங்கள் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இங்கு பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஆகும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த நிறுவனங்கள் மூலம் இரண்டு ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றன. இரண்டு லட்சம் சில்லறை விற்பனையாளர்களும் இந்த நிறுவனங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். இவர்கள் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு.  இங்கு ஒரு பகுதியில் (தமிழகத்தில்) வெளிநாட்டு குளிர்பாணங்களை புறக்கணிப்பு என்பது ஒட்டுமொத்த நாட்டின் அடிப்டை பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானதாகும். நுகர்கவோர்கள் தாங்கள் விரும்பும் பொருளை தேர்ந்தெடுக்கும் உரிமைக்கும் எதிரானதாகும். இது ஜனநாயக விரோத செயலாகும். மேலம் தடை விதிப்தன் மூலம் கள்ளச்சந்தை பெருகும்” என்று தெரிவித்துள்ளார்.

இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.