பெரம்பலூர்:

க்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர், தாமதமாக வந்ததால், அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார். இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு கமல்ஹாசன் கட்சி சார்பில்,செந்தில்குமார்  வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் வந்தார். ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், அவர் தாமதமாக வந்ததால் அவரது மனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார்.

ஆனால், வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளரை தவிர, அவரது கட்சியினர் முன்கூட்டியே தேர்தல் அலுவலகத்திற்கு வந்துவிட்ட நிலையில், வேட்பாளருக்காக 10 நிமிடம் வரை காத்திருந்த தேர்தல் அதிகாரி, 3.20 மணிக்கு வந்து வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார்.

ஆனால், தேர்தல் அதிகாரி. காலதாமதம் மற்றும் உரிய ஆவணம் இல்லாத காரணத்தால் தேர்தல் மனுவை ஏற்க மறுத்துவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.