சென்னை:

மிழகத்தின் 22 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைகள் பரபரப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வந்துள்ள வாக்கு எண்ணிக்கையின்படி, திமுக, அதிமுகவை  தவிர டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் டெபாசிட் வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியலை புரட்டிப்போடுவோம் என்று கூறி வந்த டிடிவி தினகரன் கட்சி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. அமமுகவின் முக்கிய பிரபலமான சென்னையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் படுதோல்வி அடைந்துள்ளார். வாக்கு எண்ணிக்கையில் 4வது இடத்துக்கு துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு முக்கிய கட்சிகள் உள்பட 41 பேர் போட்டியிட்டனர். இதில் திமுகவை சேர்ந்த திமுக ஆர்.டி.சேகர் 15216  வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து,  அதிமுக  வேட்பாளர்  ஆர்.எஸ்.ராஜேஷ் 5803 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரன் கட்சியை சேர்ந்த  வெற்றிவேல் வெறும்  3907 வாக்குகள் மட்டுமே படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டி ருக்கிறார். நாம் தமிழர்   வேட்பாளர் மெர்லின் சுகந்தி  1235 வாக்குகளும் மக்கள் நீதி மய்யம் – பிரியதர்ஷினி 3907 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதுபோல நோட்டா 466 வாக்குகள் பதிவாகி உள்ளன.

வெற்றிவேலின் படுதோல்வி அமமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடநத் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது  பெரம்பூர் தொகுதியின் அதிமுக  எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இடையில், அவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த காரணத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  தற்போது  அமமுக சார்பில் அவர் போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலின்போதும் திமுக வேட்பாளர்  சேர்ந்த தனபாலனை வெறும் 519 வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்கடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.