சென்னை:

ன்று காலை முதல் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி மற்றும் லோக்சபா தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் குயின்ஸ் மேரிஸ் கல்லூரியில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்து வரும் நிலையில், அங்கு அதிமுக வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். ஏற்கனவே காலையில், ஈவிஎம் இயந்திரத்தில் சீர் சரியாக இல்லை என்று  சம்பந்தமாக பிரச்சினையை ஏற்படுத்தியதை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து,  சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன்  ராணி மேரி கல்லூரிக்குச் சென்று பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். பின்னத் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுக வேட்பாளர்  ராஜேஷ் பிரச்சினை செய்து வருகிறார். வாக்கு இயந்திரத்தின் எண் வேறுபடுவதாக கூறி தேர்தல் அலுவலர்களிடம் அதிமுக முகவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.  இதன் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதிக்கு  22 சுற்றுக்கள் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், தற்போதுவரை  4 சுற்றுக்கள் மட்டும எண்ணப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு வாக்கு எண்ணிக்கை தாமதமாகி வருகிறது.

அதுபோல  தேனி தொகுதி மற்றும், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை மெதுவாகவே நடைபெற்று வருகிறது.