பேரறிவாளன் பரோல் விவகாரம்: அ.தி.மு.க. ஆதரவு  எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை:

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களில் ஒருவரான பேரறிவாள னுக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தொடர்பாக இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் தமீமும் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சந்தித்தனர்.

பேரறிவாளனின் தந்தை வயோதிகம் மற்றும் நோய் காரணமாக படுத்தபடுக்கையாக இருக்கிறார்.  அவரைக் காண பரலோலில் செல்ல பேரறிவாளன் மனு செய்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.

இதற்கு  தமிழக அரசியல்  தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தனியரசு, தமிமுன்அன்சாரி ஆகிய மூவரும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வரும் அவர்கள், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர அவர்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் மூவரும் இது தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்கள். ஸ்டாலின் இருக்கை பகுதிக்கு சென்ற அவர்கள் இது தொடர்பாக பேச்சு நடத்தினார்கள். பிறகு மு.க.ஸ்டாலினிடம் அவர்கள் மனு ஒன்றையும் அளித்தனர்.

பிறகு சட்டமன்ற வளாகத்தில் மு.க.ஸ்டாலினை பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் சந்தித்து பேசினார்.