Random image

7 பேர் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்…..பேரறிவாளர் தாயார் வேண்டுகோள்

சென்னை:

7 பேர் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேட்டுக் கொண்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டள்ளது.

இதையடுத்து முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்தித்து நன்றி கூறினார். இதன் பின்னர் அற்புதம்மாள் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ முழு நிம்மதியை அளித்துள்ளார் முதல்வர் பழனிசாமி. அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி. 7 பேர் விடுதலையை அரசியலாக்க வேண்டாம். 27 ஆண்டு வேதனைக்கு இன்று தீர்வு கிடைத்துள்ளது.பரிந்துரை மீது விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என நம்பிக்கையுள்ளது’’என்றார்.