சென்னை:

பேரறிவாளனினுக்கு மேலும் ஒரு மாதகாலம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பரோலில் விடப்பட்டார். ஒரு மாத விடுமுறையில் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் கடுமையான நிபந்தனைகளுடன் வீட்டில் இருக்கிறார். அவரது பரோல் நாளை மறுநாள் (24ம் தேதி) முடிவடைகிறது.

இதனிடையே பேரறிவாளன் வருகையால் அவரது தந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் மேலும் ஒரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம்  நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது.