மற்ற மாநிலங்களை விட நீட் தேர்வில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது: அமைச்சர் செல்லூர் ராஜூ

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நீட் தேர்வில் தமிழகம் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “நீட் தேர்வு அவசியமில்லை என்கிற கொள்கை முடிவில் எங்களுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அனைத்து மாநிலங்களிலும் நீட் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் விதித்துள்ள உத்தரவால், வேறு வழியின்றி தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் சிறந்த தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று தெரிகிறது” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி