புதுடெல்லி: பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்(பிஎம்என்டிபி) மூலம், சிறுநீரக நோயாளிகளின் வீட்டிலேயே அவர்களுக்கு பெரிடோனியல் டயாலிசிஸ் வசதியை அளிப்பதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

மாவட்ட மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை தருவதற்காக இந்த திட்டம் கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

எனவே, அனைவருக்கும் இந்த திட்டத்தின் பயன்கள் சென்று சேரும் வகையிலும், இதற்கான செலவினங்களை குறைக்கும் வகையிலும், வளங்களின் செயல்திறனை அதிகப்படுத்தும் வகையிலும், இந்தப் புதிய அம்சம் திட்டமிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிடோனியல் டயாலிசிஸ் என்பது பொதுவான ரத்த சுத்திகரிப்பு முறையைக் காட்டிலும், ஒரு மாறுபட்ட வழியில் ரத்தத்தை சிறந்த முறையில் சுத்தம் செய்யும் ஒரு வழிமுறையாகும்.