2018ம் ஆண்டின் சிறந்த 10 காவல்நிலையங்களில் இடம்பெற்ற ‘பெரியகுளம்’ காவல்நிலையம்

டில்லி:

2018ம் ஆண்டில்,  நாட்டின் சிறந்த 10 காவல்நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்த  ‘தேனி’ காவல்நிலையம் இடம்பெற்றுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த ஒரு காவல் நிலையம் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அருகே உள்ள  தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம். இங்குள்ள  காவல் நிலையம், 2018ஆம் ஆண்டின் சிறந்த 10 காவல் நிலையங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பட்டியலை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வரிசைப்படுத்தி உள்ளார்.

அந்த பட்டியலில், முதல் இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ‘கலு’ காவல் நிலையம் இடம்பெற்றுள்ளது. 2வது இடத்தை அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள  கேம்ப்பெல் பே காவல் நிலையமும், 3வது  இடத்தை மேற்கு வங்கத்தை பரக்கா ((Farakka)) காவல் நிலையமும் பெற்றுள்ளன. 4வது இடத்தை புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையமும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 8வது இடத்தை தமிழ்நாட்டில் உள்ள பெரிய குளம் காவல் நிலையம் பெயர் இடம்பெற்றுள்ளது.