அம்பேத்கரோடு அடிக்கடி பேசுகிறேன்..!!” “ அட்டகத்தி” ரஞ்சித்

magesh magesh அவர்களின் முகநூல் பதிவு:

“அட்டகத்தி”, “மெட்ராஸ்”, “ கபாலி” பட இயக்குநர் ரஞ்சித், “அந்திமழை” மாத இதழில்…

“அட்டகத்தி படத்தில் ஒரு காட்சிக்காக அம்பேத்கரின் போட்டோவை வீட்டு சுவரில் மாட்டினேன்.அம்பேத்கரின் படம் இருந்தால் மதுரை பக்கம் படம் ஓடாது என்று சொல்லி,அந்த போட்டோவை எடுக்க சொன்னார்கள்.

அம்பேத்கரோடு நான் அடிக்கடி பேசுவதுண்டு.அன்றும் பேசினேன்.உங்கள் புகைப்படத்தை எடுக்கிறேன் என்று கோவிச்சிக்காதிங்க,உங்கள் மக்கள் பத்தின படத்தைதான் எடுக்கிறேன்,என்று சொல்லி விட்டு போட்டோவை எடுத்தேன்.!”

மகிழ்ச்சி!

அதே அம்பேத்கர்தான், “பெரியார் படத்தை எந்த திரைப் படத்திலும் வைக்காதே!” என்றாரா?

அடுத்தமுறை அம்பேத்கரிடம் பேசும்போது பெரியார் பற்றி கேட்டுப்பாருங்கள்.  பெரியாரின் பணிகளை, பெருமைகளை, அம்பேத்கரே சொல்வார்.