பெரியார் குறித்து அவதூறு: ரஜினிமீது திராவிடர் விடுதலை கழகம் வழக்கு

சென்னை:

பெரியார் குறித்து அவதூறு: ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்து, பெரியாரை சோ கடுமையாக  விமர்சித்தார் என்றும், இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்.  மேலும், 1971ம் ஆண்டு நடைபெற்ற திராவிடர் கழக பேரணியின்போது, ராமன் சீதையின் நிர்வாண கோலத்திலான படங்கள்  ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட தாகவும் விமர்சித்தார்.

பெரியாரின் ரஜினி குறித்த பேச்சு தமிழகத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக  தெரிவித்தார்.

இந்த நிலையில்,  பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுமீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி