சென்னை:

துக்ளக் அறிவாளி பேச்சு மற்றும், பெரியார் குறித்து துக்ளக் விழாவில் ரஜினி  கூறிய தகவல் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, இன்று சென்னையில் ரஜினியின் வீட்டை முற்றுகையிடப் போவதாக பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு  ரஜினி செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று திட்டவட்டமாக கூறிய ரஜினி, அதற்கு ஆதாரமாக சில பத்திரிகை செய்திகளின் ஜெராக்ஸ் பிரதிகளை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

 ‘1971ல் நடந்த திராவிடர் கழக பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியவர், கற்பனையாக  நான் எதுவும் கூறவில்லை. அந்த நிகழ்வின்போது,  ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டுசெல்லப்பட்டது என பலரும் ஊர்ஜித்துள்ளனர்.

இதுகுறித்து இந்துவின் அவுட்லுக் பத்திரிகையில் கூட செய்தி வெளியானது. பத்திரிகைகளில் வந்ததை தான் நான் கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது’   என்று தெரிவித்தார்.

ரஜினியின் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  ரஜினிகாந்த் மேற்கோள் காட்டும் Outlook பத்திரிகை, தி இந்து நாளிதழ் குழுமத்தில் இருந்துவருவது அல்ல. அது ரஹேஜா பிரதர்ஸ் நடத்தும் ஆங்கிலப் பத்திரிகை.

இந்த ஆங்கிலப்பத்திரிகை யாருடைய என்பது கூட தெரியாமல்,  Outlook பத்திரிகை இந்து குரூப் நடத்துகிறது என பொய்யான தகவல்களை தெரிவித்து உள்ளார்…  அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது கூறி வரும், ரஜினி, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மட்டுமல்லாமல், அதற்கு விளக்கம் சொல்லியதிலும், தகவறான தகவலை தெரிவித்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய பேட்டியின்  முதல் வரியிலேயே தப்பான ஒரு தகவலை தெரிவித்து, ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினியின் தகவறான தகவல்கள் சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது

ரஜினி தனது அரசியல் படத்தின் ஓப்பனிங் சீனிலேயே தடுமாறி விட்டாரே என்றும், ரீடேக் கேட்க இது என்ன சினிமாவா? என்றும் விமர்சித்து வருகின்றனர்.

அவுட்லுக் எந்த குழும பத்திரிகை? என்ற தெரியாத நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, முதல் சுற்றிலேயே வழுக்கி விழுந்து விட்டாரே என்றும், 

பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டாமா ரஜினி?

என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டந்த 14ந்தேதிசென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற  துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு  விழாவில்   கலந்துகொண்டு பேசிய ரஜினி, ‘பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டது’ என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ரஜினி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடிகர் ரஜினியின் உருவ பொம்மையை ஆதித் தமிழர் கட்சியினர் எரித்தனர்.

இந்த நிலையில், ரஜினி,  தனது தரப்பு விளக்கத்தை இன்று தெரிவித்தார்.