சிம்புவின் ‘பெரியார் குத்து’ ஆல்பம் வெளியீடு

சிம்பு நடித்திருக்கும் ‘பெரியார் குத்து’ ஆல்பம் இன்று வெளியானது.

‘செக்க சிவந்த வானம்’ படத்திற்குப் பிறகு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில்   சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புடன் நடனம், பாடல்களிலும் சிம்புவுக்கு  ஆர்வம் உண்டு. ஆகவே அவ்வப்போது ஆல்பங்களை வெளியிட்டுவருகிறார்.

அந்தவகையில், பாடலாசிரியர் மதன் கார்க்கியி எழுத..  ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க.. ‘பெரியார் குத்து’ என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார் சிம்பு.

தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை ரெபெல் ஆடியோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.