சென்னை: சென்னையில் உள்ள  பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை. கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு  பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில்,  அந்த பலகையில் எழுதப்பட்ட கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு  எழுத்து மீது கருப்பு மை ஊற்றி மறைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை  பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பெயலே புழக்கத்தில் உள்ளது. இந்த நிலையில், திடீரென, ஈவேரா சாலையின் பெயர், கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டு, புதிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான புகைப்படம் சமுக வலைதளங்களிலும் வைரலானது. இதற்கிடையில், பெரியார் பெயர் நீக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ, வீரமணி உள்பட தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோ பெயர் பலகை மீது கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகஅரசு இதுவரை எந்தவொரு விளக்கம் தெரிவிக்கவில்லை.

மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மத்திய அரசின் நெடுஞ்சாலை துறையில் இந்த பெயர் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்றே நீடித்து வருகிறது. தமிழக அரசின் பதிவேட்டில் மட்டும் ஈவேரா சாலை என்று மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.