அறந்தாங்கி அருகே பெரியார் சிலையின் தலை துண்டிப்பு…. பதற்றம்

--

புதுக்கோட்டை:

றந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை தலை மட்டும் மர்ம நபர்க ளால் உடைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலையின் தலையை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மருத்துவமனை அருகே  பட்டுக்கோட்டை  செல்லும் சாலையில்  பெரியார் சிலை உள்ளது. இந்த சிலையில் கடந்த  1998-ஆம் ஆண்டு திக தலைவர் கி.வீரமணியால் திறக்கப்பட்டது.

தற்போது  தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தேர்தல் விதிமுறைப்படி பெரியாரின் சிலை துணியால் மூடப்பட்டிருந்தது. பின்னர்   பெரியார் பொதுவான தலைவர் என்பதால் அவரது சிலை மீது மூடப்பட்டிருந்த துணியை அகற்றலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் அனுமதி அளித்திருந்தார். அதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது முகத்தை மூடிய துணி அகற்றப்பட்டது

இந்த நிலையில் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் பெரியாரின் சிலையில் உள்ள அவரது தலையை மட்டும் உடைந்து எறிந்துள்ளனர். இன்று காலை இதைக்கண்ட அந்த பகுதி பொதுமக்கள் உடனடி யாக காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதற்குள் அரசியல் கட்சியினரும் அந்த பகுதியில் திரண்டதால், பரபரப்பு  நிலவி வருகிறது.

அந்த  பகுதியில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் என கூறி உள்ளனர்.

You may have missed