நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான பரிசு, பரியேறும் பெருமாள் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துன் 96 என்ற படத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகருக்கான விருதுக்கும், திரிஷா சிறந்த நடிக்ககைன விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மற்ற விருதுகளுக்கான பட்டியலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தயாரித்த படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

நார்வேயில் 10வது ஆண்டு தமிழ் திரைப்பட விழா நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ்ப்படம் படம் நடிகர் நடிகைகள், டெக்னிக்கலில்  தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி பரியேறு பெருமாள் படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. அதுபோல மேற்கு தொடர்ச்சி மலை டைரக்டர் லெனின் பாரதி சிறந்த டைரக்டருக்கான விருதும், சிறந்த இசை அமைப்பாளராக பரியேறும் பெருமாள், வடசென்னை  படத்துக்கு இசை அமைத்த சந்தோஷ் சிவனுக்கும் கிடைத்துள்ளது.

96 படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி சிறந்த கதாநாயகன் விருதுக்கும், திரிஷா சிறந்த கதாநாயகி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:

சிறந்த படம் : பரியேறும் பெருமாள்  (Best Film: Pariyerum Perumal)

சிறந்த பட இயக்குனர்:  லெனின் பாரதி (Best Director: Lenin Bharathi for Merkku Thodarchi Malai)

சிறந்த நடிகர் – ஆண்: விஜய் சேதுபதி (Best Actor Male: Vijay Sethupathi for 96)

சிறந்த நடிகை – பெண்: திரிஷா (Best Actor Female: Trisha for 96)

சிறந்த இசைஅமைப்பாளர் – சந்தோஷ் சிவன் (Best Music Director: Santhosh Narayanan for Pariyerum Perumal and Vada Chennai)

சிறந்த தயாரிப்பாளர்: எஸ்.கே.புரடக்சன்ஸ் (Best Production: SK Productions, Sivakarthikeyan for Kanaa)

சிறந்த பாடலாசிரியார் – கார்த்திக் (Best Lyricist: Karthik for ‘Kadhale Kadhale’ from 96)

சிறந்த வில்லன் – சரவணன் ( Best Antagonist: Saravanan for Raatsasan)

சிறந்த துணைநடிகர் – மயில்சாமி ( Best Supporting Role Male: Mayilsamy for Annanukku Jey)

சிறந்த துணைநடிகை – தீபா (Best Supporting Role Female: Dheepa for Kadaikutty Singam)

சிறந்த ஒளிப்பதிவாளர் – தேனி ஈஸ்வர் (Best Cinematography: Theni Eswar for Merkku Thodarchi Malai)

சிறந்த திரைக்கதாசிரியர் – நெல்வன் (Best Screenplay: Nelson for Kolamavu Kokila)

சிறந்த பின்னணி பாடகர்ஆண் – அந்தோனி தாசன் (Best Playback Singer Male: Antony Dasan for ‘Sodakku Mela’ song from Thaana Serntha Kootam)

சிறந்த பின்னணி பாடகி – பெண் – சின்மயி ( Best Playback Singer Female: Chinmayi for ‘Kadhale Kadhale’ from 96)

சிறந்த எடிட்டர் – ரூபன் (Best Editor: Ruben for Irumbu Thirai)

சமூக விழிப்புணர்வு விருது: அருண்ராஜா  (Best Social Awareness Award: Arunraja Kamaraj for Kanaa)

இயக்குனர் பாலுமகேந்திரா விருது – பாண்டிராஜ் (Director Balu Mahendra Award: Pandiraj for Kadaikutty Singam)

வாழ்நாள் சாதனையாளர் விருது – இயக்குனர் மகேந்திரன் (Lifetime Achievement Award: Director Mahendran)

இயக்குனர் கே.பாலசந்தர் விருது – யோகி பாபு (KS Balachandran Award: Yogi Babu for Kolamavu Kokila)