சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு

பெங்களூரு:

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவுக்கு சிறையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக வெளியான புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சிறைக்கு சசிகலாவை சந்திக்க சென்றார்.

மதியம் முதல் டிடிவி தினகரன் காத்திருந்தும் சசிகலாவை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லைஇதனால்அவர் சசிகலாவை சந்திக்காமலேயே சென்னை திரும்பியுள்ளார்.