சென்னை:

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் மயிலாப்பூர் துணை கமிஷனர் சரவணன் உயர்நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளார்,

அதில், ‘‘ சென்னையில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட ஏதாவது ஒரு இடத்தில் அய்யாக்கண்ணு உண்ணாவிரதம் இருக்கலாம். வள்ளுவர் கோட்டம், காயிதே மில்லத் மண்டபம், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தான் காவல்துறை சார்பில் இந்த பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.