புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி…

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரைகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடவும், கிறிஸ்துமஸ் தினத்தன்று சர்ச்களில் பிராரத்தனைகளுக்கும்  அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இன்னும் 9 நாளில் புத்தாண் பிறக்க உள்ளது.   2021 ஆம் ஆண்டை வரவேற்க உலக மக்கள் ஆவலோடு இருந்து வருகின்றனர். ஆனால், கொரோனா தொற்று பரவல்  காரணமாக, பல நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை இல்லை முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். மேலும்,  கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கம் போல நடக்கும் என்றும் எந்தவித தடையும் கிடையாது என்று கூறினார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது,   விடுதிகளில்  200 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும், கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை இல்லை, டிசம்பர் 31ஆம் தேதி  இரவு புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட  வேண்டும், பொதுமக்கள் முக கவசம் அனிந்து புத்தாண்டை கொண்டாடலாம்  என  நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில்  கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may have missed