மன்னார்குடியில் டிடிவி விழா நடத்த அனுமதி: அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை:

ன்னார்குடியில் டிடிவி அமைப்பு சார்பில் நல்லத்திட்ட உதவிகள் வழங்கும்  விழா நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவரும், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் தனது அமைப்பை வலுப்படுத்த சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார். அப்போது அந்தந்த பகுதியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார். இது மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

இதன் காரணமாக பல இடங்களில் டிடிவி தரப்பினர் கூட்டத்துக்கு அரசு அனுமதி வழங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்டு 5ந்தேதி மன்னார்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு அந்த பகுதி அமமுக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு செய்திருந்தனர்.

ஆனால், காவல்துறை சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி, அனுமதி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து, அந்த பகுதி நிர்வாகி காமராஜ், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து.

வழக்கின் விசாரணையை தொடர்ந்து, மன்னார்குடியில் நலத்திட்ட உதவி விழா நடத்துவது குறித்து,  டி.டி.வி தரப்பினர் மனுவை பரிசீலித்து  அனுமதி  தர வேண்டும் என்று போலீசாருக்கு சென்னை உயர்நீதி மன்றம்  உத்தரவிடப்பட்டுள்ளது.