சென்னை: ஆகஸ்டு 10ந்தேதி முதல் சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்க  தமிழகஅரசு அனுமதி அளித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. இருந்தாலும் தளர்வுகளுடன் 7வது கட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன்  ஆகஸ்டு 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது மேலும் சில தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திங்கட்கிழமை முதல் திறப்பதற்கு அனுமதி அழிக்கப்படு வதாக  தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத்தலங்கள் 10 ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையரிடம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற்று வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம்.

ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவான வருமானம் வரும் சிறிய வழிபாட்டுத் தலங்கள் பொது மக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

ஏற்கனவே பொது மக்கள் தரிசனத்திற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளில் சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.