சசிகலாவை சந்திக்க வளர்மதி, கோகுல இந்திரா, சரஸ்வதிக்கு மறுப்பு

--

பெங்களூரு;

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனையை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள சசிகலாவை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா, அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாராவுக்கு இன்று வந்தனர்.

 

ஆனால் அவர்கள் சிறைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.