பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் மே17ந்தேதிஊரடங்கு விலக்களுக்கு பிறகு நடைபெறும் திருமணங்களில் கலந்துகொள்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து தற்போதே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி,
  1. மே 17ந்தேதிக்கு பிறகு நடைபெறும் திருமணங்களில் அதிகப்பட்சமாக 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்.
  2. அனைவரும் ஆரோக்கிய சேது செயலி உபயோகத்தில் வைத்திருக்க வேண்டும்
  3. கர்ப்பிணி பெண்கள் திருமணத்தில் கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும்
  4. 10வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் திருமணத்தில் கலந்துகொள்ளக்கூடாது
  5. 65வயக்கு மேற்பட்ட முதியவர்கள் கலந்துகொள்ளக்கூடாது
  6. திருமண விருந்தில் மது பரிமாறக்கூடாது
  7. திருமணத்திற்கு வருபவர்கள் அனைவருக்கும் சானிடைசர் கொடுத்து கைகழுவ வேண்டும்
  8. அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்
  9. அனைவருக்கும் ஸ்கிரினிங் டெஸ்ட் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.